வெளிநாடுகளில் பிரசாரப்படுத்தப்படும் வகையில் இலங்கையில் முஸ்லிம்களின்
பர்தாக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
எவரும் கூறுவது போல் எந்த முஸ்லிம்களது பர்தாவும் நாட்டில் எங்கும்
கழற்றப்படவில்லை என தெரிவித்த அவர், முஸ்லிம்கள் சுதந்திரமாக பர்தா அணிந்து
நடமாடுவதை எங்கும் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்
நேற்று முன்தினம் பத்திரிகைப் பேரவைச் சட்ட ஒழுங்கு விதிகள் மீதான
விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அச்சமயம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்திருந்த முஸ்லிம் மாணவிகளைச்
சுட்டிக்காட்டி அவர்கள் பர்தா அணிந்து சுதந்திரமாக செயற்படுவதாகவும்
சபையில் தெரிவித்த அவர், பர்தா அணிவதற்கு இந்த நாட்டில் எந்த தடையும் இல்லை
என்பதை இது வெளிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment