Friday, June 7

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை - ஜே.வி.பி யும் மறு பக்கம் பல்டி

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
 
தற்போதைய சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்து கால நேரத்தை விரயம செய்யாது 13ம் திருத்தச் சட்டத்தையே ரத்து செய்வது புத்திசாதூரியமான தீர்வாக அமையும் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் உத்தேச மாகாணசபைத் திருத்தச் சட்டத்தில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமையானது இந்திய ஆட்சி முறைமையை தழுவியது எனவும் அந்த முறைமையானது இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மாகாணசபை முறைமைக்கு எதிர்ப்பை வெளியிடும் தமது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் முதலில் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment