தங்கல்லை பிரதான வீதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றின் மீது இன்று காலை
பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கக் கூடாது எனக்கோரி கொழும்பு நோக்கி
பாதயாத்திரை செல்லும் குழுவினரே இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை
நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
தங்கல்லை நகர சபையின் கீழ் முஸ்லிம்களால் நடத்தப்படும் இவ் இறைச்சிக் கடை
மீது தாக்குதல் நடத்தியதாகவும் அங்கிருந்த உடைமைகளுக்கு தீ
வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment