முஸ்லிம்களுக்கு அநீதி நடப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர் குறிப்பிட்டார்.
நேற்று திங்கட்கிழமை, கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது
ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், ‘அரசாங்கம் முஸ்லிம்களின்
விடயத்தில் அக்கறையுடன் செயற்படுகின்றது. உண்மைக்குப் புறம்பாக சிலர்
வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதில் எதுவித உண்மையும் இல்லை.
முஸ்லிம்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment