Tuesday, June 4

மாட்டிறைச்சியை உட்கொண்டு, மாடுகளை கொலை செய்யக் கூடாது என கூறுகிறார்கள்..!


மாகாணசபை அதிகாரங்களையும் மற்றும் வரப்பிரசாதங்களையும் முழு அளவில் அனுபவித்துக் கொண்டு, அதனை ரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜாதிக ஹெல உறுமய கட்சி தேவைகளுக்கு ஏற்ற வகையில் தமது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
எனினும் மாட்டிறைச்சியை உட்கொண்டு மாடுகளை கொலை செய்யக் கூடாது என கோருவதனைப் போன்றே தற்போதைய ஆளும் கட்சியின் சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
 சின்ன பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு மாகாணசபைகளில் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர்.
இவர்கள் மாகாண சபை அதிகாரங்களை முழு அளவில் அனுபவித்துக் கொண்டே வடக்கு மாகாண அதிகாரிகளை நிறுத்துமாறு கூறி வருகின்றனர். இது வெட்கம் கெட்ட செயலாகும்.
  
 சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக இந்த அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும், மாகாணசபை உறுப்பினர்களிடம் காவல்துறை உத்தியோகத்தர்கள் பல சந்தர்ப்பங்களில் அடிவாங்கியுள்ளதாகவும் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment