இராவணனுக்கு சிலை அமைக்காது சீதைக்கு
கோயில் அமைக்கக் கூடாது என ராவணா பலய தெரிவித்துள்ளது. இந்திய நிதி
உதவியின் கீழ் இலங்கையில் சீதைக்கு பாரிய கோயில் ஒன்றை அமைக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னதாக
ராவணனுக்கு சிலை அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ராவணனின்
புகழையும் பெருமையையும் எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என
சுட்டிக்காட்டியுள்ளது.
சீதைக்கு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பை
வெளியிடவில்லை எனவும், எனினும் அதற்கு முன்னதாக இராவணனுக்கு சிலை
அமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. தமது அமைப்பு இனவாத,
கடு;ம்போக்குடைய அமைப்பு என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள
முடியாது எனவும், தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க தமது அமைப்பு
முயற்சிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment