பலாங்கொடை
பிரதேசத்தில் 15 வயதான இளம் பிக்குவொருவரை அப்பகுதியைச் சேர்ந்த
வியாபரியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட
பிக்கு தற்போது ரத்னபுரவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில்
சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வியாபரி ஆபாசப் படமொன்றைக் காட்டியே இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அச்சந்தேக நபர் வேறொரு மதத்தைச் சேர்ந்தவரென்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுபல சேனா மற்றும் பல சிங்கள இயக்கங்கள் ஒன்றிணைந்து தற்போது பலாங்கொட பிரதேசத்தில் ஆர்பாட்டம் மேற்கொண்டு வருகின்றது.
சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உண்மையிலே குற்றவாளியா அல்லது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளாரா என்பது பற்றி விரைவில் தெரியவரும்.
No comments:
Post a Comment