நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த தீவிரவாத அமைப்புக்களின்
நடவடிக்கைகளுக்கு விளம்பரத்தை கொடுப்பதில்(publicity) இருந்து இலங்கை
ஊடகங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களை கேட்டுள்ளார் .
அவர்களுக்கு ஊடக விளம்பரம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மங்கிப்போய்விடுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று (21) காலை அச்சு மற்றும்
இலத்திரனியவியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய
போதே இதனை தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும்
முக்கியஸ்தர்கள் கலந்துகொண்துள்ளனர்.
அவர்களிடம் பேசிய ஜனாதிபதி தங்கல்லையில்
முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான இறைச்சிக் கடை ஒன்றை தாக்கி தீ
வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளார்
என்று தெரிவித்துள்ளார் .
அரசு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை
சகித்து கொள்ளாது என்றும் சிங்களம் ராவய செல்லும் வழியில் முஸ்லிம்
வணிகங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார் .
சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்ட
பின்னர் சிங்கள ராவய கண்டன ஊர்வலத்தில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை
கடுமையாக குறைந்துள்ளது என்றும். முஸ்லிம் நிறுவனங்களை இலக்கு வைப்பவர்கள்
எதிர்வரும் நாட்களில் எதிர்ப்பை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றும்
ஜனாதிபதி ஊடக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.-D.B.S.ஜெயராஜ் எழுதியுள்ள ஆங்கில கட்டுரையில் இருந்து.
No comments:
Post a Comment