பதின்மூன்றாவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் முஸ்லீம்
காங்கிரசை விட்டுவிட்டு ஒரு தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான
ஒரு விடயமாகும். அது அரசியல் சாதுரியமும் அல்ல. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு
மிகப்பெரிய அடியும் ஆகும். அது இலங்கையின் 18வது திருத்தச்சட்டத்தில்
மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு இந்த ஜனாதிபதிக்கு தாங்கள் கொடுத்த
ஆதரவுக்கு அவர் செய்த பரோபகாரமாக இப்படியானதொரு பழிவாங்கலை ஜனாதிபதி
செய்துள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனையில், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற 51 வேலைத்திட்டங்களை
உள்ளடக்கியதாக ‘கல்முனைக்கு வெளிச்சம்’ எனும் பெயரில் 2013.06.21ல்
இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நள்ளிரவையும் தாண்டி இடம்பெற்ற மாபெரும்
கூட்டத்தின் போதே மேற்கண்ட விடயங்களை அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்,
இந்த தெரிவுக்குழுவுக்கு உள்ள நம்பகத்தன்மையை குறைந்த பட்சம் முஸ்லீம்
காங்கிரசை இணைத்தாவது பெற்றிருக்கலாம். அல்லது இனியாவது இணைத்துக்கொள்ள
வேண்டும் இல்லை என்றால் அந்த தெரிவுக்குழுவின் யோசனைகளை குப்பையில்
போடட்டும். என்று கூறிய ஹக்கீம் குறைந்தபட்சம் முஸ்லீம் காங்கிரசின்
பிரசன்னமும் இல்லாத தெரிவுக்குழுவின் யோசனையை சர்வதேசம் எவ்வாறு நோக்கும்
என்றும் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் கட்சி ஒரு மாமூலான அரசியல் கட்சி
மாத்திரம் அல்ல என்று கூறிய அமைச்சர் அது அடிப்படையில் ஒரு விடுதலை
இயக்கம். அந்த விடுதலை இயக்கத்தின் இயல்பு தானாகவே சமூகத்தின் விடுதலை
பற்றியே யோசிக்கும். என்று கூறிய அமைச்சர் இன்றைய சுழலில் ஸ்ரீ லங்கா
முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என
எதிர்பார்க்கின்றனர் அவர்களது ஆசைகளுக்கு தீனி போட வேண்டிய அவசியமில்லை
என்றும் தேவையான சந்தர்ப்பத்தில் காத்திரமான முடிவை எடுக்கும் என்றும்
தெரிவித்தார்.
கிழக்குமாகாண சபை தேர்தலின் போது மற்றவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை
விட்டுவிலகி விடுவார்கள் என பலர் எதிர்பார்த்ததாகவும் எதிர்காலத்தை
உணர்ந்தே இந்த இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுடன் அரசுடன் இருப்பதாகவும்
அப்போது தமிழ் தலைவர்களும் தமிழ் ஊடகங்களும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசை
தூற்றியதகவும் பல இழப்புகளுடன் அரசுடன் இருக்கும் இந்த சுழலில்
அமைச்சரவையிலும் அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிவதாகவும் பேசிய ஹக்கீம்
தற்போது தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் விடயத்தில்
விழிப்பாகவே இருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் முதலில் நாங்கள் ஒற்ற
கருத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசில் உள்ள சில
சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் அப்பட்டமாக பறிக்கப்பட
எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவாளிக்கலாம் இன்னும் சிலர் மௌனமாக
இருக்கலாம் ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அதன் இயல்பான அரசியலையே
செய்யும் என்றும் தெரிவித்தார்.
வட கிழக்கு முஸ்லீம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லீம்
காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்களின்
பாதுகாப்புக்காகவும் செயற்படும் என்றும் கல்முனையில் ஹரீஸ் செய்கின்ற
அபிவிருத்தி வேலைகள், மற்றையவர்கள் செய்கின்ற காட்டிக்கொடுப்புக்கு
கிடைக்கின்ற பரிசாக அமைவது போன்றதல்ல என்றும் தெரிவித்தார்.
கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக்கட்சி கடுகிக்கும்
கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் சிறி லங்கா சுதந்திரக்கட்சிக்கு
ஆங்காங்கே கொஞ்சப்பேர் ஏதோ கொண்டு செல்வதாகவும் பேசிய ஹக்கீம் தமிழ் தேசிய
கூட்டமைப்பினர் புலன் பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட
வீண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
13வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும்
திருத்தங்களை கொண்டுவர முற்பட்டாலும் அந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு
வரவேண்டும் பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள்
இருப்பதாகவும் இது நடக்கப்போகும் காரியம் இல்லை என்றும் ஹக்கீம்
தெரிவித்தார்.
முஸ்லீம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்
தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக்கூடாது என்றும்
கேட்டுக்கொண்டர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என்றும்
கூறிமுடித்தார்.
No comments:
Post a Comment