Monday, June 24

இ.போ.ச பஸ்களில் இனி இலத்திரனியல் கட்டண அட்டைகள்


இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பஸ் வண்டிகளில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தக்கூடிய கட்டண அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வல்கம அறிவித்துள்ளார்.
புதிதாக வேலைக்கமர்த்தப்பட்ட சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் ஒன்றில் வைத்தே அமைச்சர் இப்புதிய திட்டம் தொடர்பாக அறிவித்துள்ளதுடன், இதன் மூலம் மிகுதிப் பணம் பெறுவதும், அது குறித்த முறைப்பாடுகளும் தவிர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment