ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில்
அரசாங்கத்தால் பிரேரிக்கப்பட்ட பல்வேறு திருத்தங்களுக்கெதிராக எழுந்த
அழுத்தங்களால் அத்திட்டத்தை கைவிடுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக
அறியமுடிகிறது.
பிரேரிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை
நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் ஊடகங்களே சுய கட்டுப்பாட்டுடன் இயங்க
வழிமுறைகளை செய்யட்டும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தகவல் தொடர்பு அமைச்சின்
மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பத்திரிகை
ஆசிரியர்களோடுடனான கலந்துரையாடலின் பின்னரே அரசாங்கம் தன் நிலையை
மாற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment