பொலநறுவையிலிருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுவதற்கு அனுமதியளிக்குமாறு
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு கிழக்கு மாகாண சமாதான
நீதவான்கள் மற்றும் மனிதஉரிமை ஸ்தாபனம் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தலிருந்து இறைச்சிக்காக மாடுகள் கொண்டு
செல்லப்படுவதற்கு தடைவிதித்து பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக்குழுக்
கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுக்கு எதிராகவே இந்த மகஜர்
அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த மகஜரை கிழக்கு மாகாண சமாதான நீதிவான்கள் மற்றும் மனித உரிமை
ஸ்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.எம் பாயிஸ், ஸ்தாபனத்தின் செயலாளர் எம்.எம்
நிலாம்தீன் ஆகியோர்கள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும்
பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோருக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இத்தீர்மானத்தை எதிர்த்து வழமைபோன்று பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு வளர்ப்புக்காகவும்,
இறைச்சிக்காகவும் மாடுகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்மென்றும்
எதிர்வருகின்ற முஸ்லிம்களின் நோன்புகால தேவைக்காக பொலன்னறுவையிலிருந்து
ஏனைய பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
பொலனறுவை மாவட்டத்தில் மாடுகளுக்கு மேய்ச்சல் தரை உட்பட மாடுகளுக்கான
பச்சைப்புல் வசதிகள் நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் மேய்ச்சல் தரை உட்பட பச்சைப்புல்
வசதிகள் நல்ல எதுவுமில்லை. அதானால்தான் பொலனறுவை மாவட்டத்தில் அதிகளவு
மாடுகள் பெருகிவருகின்றது. இலங்கையில் மாடுகளுக்குத் தேவையான
பச்சைப்சைப்புல் வசதிகள் பொலனறுவை மாவட்டில்தான் அதிகளவு கிடைகின்றது.
அதனால்தான் ஏனைய பகுதி மக்கள் பொலன்னறுவை மாவட்ட மாடுகளை
விரும்புகின்றார்கள்
அத்துடன் வளர்ப்புக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் பொலனறுவை
மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றது. குறிப்பாக வளரப்புக்காக
பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து மாடுகள் கொண்டு செல்வதற்கு வழமைபோன்று
அனுமதிக்குமாறு தயவுடன் வேண்டுகின்றோம் அதில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment