தேசிய
சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி அவதூறான கருத்துகளை
வெளியிட்டமையை தாம் வன்மையான கண்டிப்பதாகவும் அவருக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்
ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர்வர் எம்.எச்.எம். அஷ்ரபின்
திடீர் மரணத்துக்கும் ரவூப் ஹக்கீமின் தற்போதைய தலைமைப் பதவியிலும்
சந்தேகம் இருப்பதாக முஸம்மில் சந்தேகம் வெளியிட்டிருந்தார். இதற்காகவே
முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment