மட்டக்களப்பில்
இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித்
அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும்
தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப்
பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக இந்து கோயில்களை
பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின்
மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற
இப்பேரணியில்; மட்டக்களப்பு இந்து அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கலந்து
கொண்டனர்.
இதற்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலார் பிரசாந்தனிடம், ஜனாதிபதி
ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை
சந்திரகாந்தனுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பின்னர் அரசாங்க
அதிபருக்கான மகஜர் மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment