இலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி, கொனகலகல விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பௌத்த சமயத்துக்காக ஒரு பிள்ளையை வழங்க சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இன்று முடியாத நிலையே உள்ளது.
ஆரம்ப காலத்தில் சிங்கள பௌத்த குடும்பம் ஒன்றில் ஏழு அல்லது எட்டு
குழந்தைகள் இருக்கும். எனினும் இன்று அது இரண்டு குழந்தைகளுக்கு
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 'சிறிய குடும்பம் பொன்னானது' என்ற மந்திரத்தை
கூறிக் கொண்டிருந்ததன் விளைவே இது.
நாட்டையும் பௌத்த மதத்தையும் அன்று முதல் பாதுகாத்தவர்கள் பௌத்த தேரர்களே.
இன்று பௌத்த தேரர்களின் தொகை குறைவடைந்துள்ளமையானது நாட்டுக்கு பாரிய
நட்டமாகும்.புதிய கணக்கெடுப்புகளின்படி நாடு முழுதும் இன்று 20,000 க்கும்
25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment