மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டை போதி மரத்திற்கு
அருகாமையில் சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபடுவதற்கு சிங்கள ராவய அமைப்பு தயாராகின்றது.
கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தும்
நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்
அக்மீமன தயாரத்தன தேரரர் தெரிவித்தார்.
பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில் தீக்குளித்து
தற்கொலை செய்து கொண்டமையை அடுத்தே பசுக்கொலை தொடர்பாக சமூகத்தில் மீண்டும்
கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment