ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (03.05.2013) அதிகாலையில் பலஸ்தீனத்திற்கு பயணமானார்.
எதிர்வரும் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் அங்கு நடைபெறவுள்ள பைத்துல் முகத்திஸ் 4 ஆவது சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கான
அழைப்பை அந்நாட்டு வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் மஹ்மூத் அல் ஹப்பாஷ்
அண்மையில் இலங்கை வந்திருந்த பொழுது நேரடியாகவே அமைச்சர் ஹக்கீமுக்கு
விடுத்திருந்தார்.
இஸ்ரவேலின்
ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பலஸ்தீன புனித பூமியில் அங்கு வசிக்கும்
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்
குறித்தும் இந்த சர்வதேச மாநாட்டின் போது உரிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
அமைச்சர் ஹக்கீம் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
No comments:
Post a Comment