கொழும்பு துறைமுக களஞ்சியப் பகுதி ஒன்றில் கடந்த 24ம் திகதி அதிகாலை ஏற்பட்ட தீப்பரம்பலுக்கான காரணம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனத்தின் தாக்கம் தான் தீப்பரம்பலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனத்தின் தாக்கம் தான் தீப்பரம்பலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்றைய தினம் வெளியிட்டார் துறைமுக செயல்திட்ட அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்தன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
இது குறித்து துரித கதியில் ஆவியாகும் தன்மையைக் கொண்ட இரசாயனங்களை
இறக்குமதி செய்த நிறுவனம் சுங்கத்திற்கு அறிவிக்கவில்லை எனவும், அவ்வாறு
அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த இரசாயனப் பொருளை அதற்கேற்ற பாதுகாப்பான
இடத்தில் களஞ்சியப்படுத்தி இருக்க முடியும் எனவும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்,
இந்த தீ விபத்தில் 55 கோடியே 60 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment