இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்
புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த சிலர் பெரஹரா ஒத்திகை நடத்தியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஒத்திகையால் தாம் அசெளகரியத்தை எதிர்நோக்குவதாக பிரதேசத்தைச் சேர்ந்த
சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களுடன் மோதலில்
ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த 17 பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கும் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment