மாகாண
சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துவது தொடர்பாக
அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று
கொழும்பில் அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய அடுத்த சில தினங்களில் கட்சியின் அரசியல்
மற்றும் அதியுயர் பீடங்கள் கூட்டப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கள் திருத்தப்படுவதை தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதால், அடுத்து
எடுக்கப்பட வேண்டிய தீரமானம் குறித்து கலந்துரையாடப்படும் என முஸ்லிம்
காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment