தங்கம் கடத்த முயன்ற அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை சுங்கப் பிரிவினர்
கைது செய்துள்ளனர். 45 வயதான அமெரிக்கப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
627 கிராம் எடையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த
முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தங்கத்தின் பெறுமதி 2.5
மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்த
விமானத்தில் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக குறித்த நபர்
நாட்டுக்குள் தங்கத்தை கடத்த முயற்சித்துள்ளார். குறித்த அமெரிக்கரின்
இரண்டாவது இலங்கை விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment