Friday, June 7

முஸ்லிம் வைத்தியர்களுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய பேராதனை வைத்தியசாலை முன் ஆர்பாட்டம்.




 
இரண்டு முஸ்லிம் வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக  ஜாதிக ஹெல உறுமய பேராதனையில் நேற்று ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது.
பேராதனை போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் இரண்டு முஸ்லிம் வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக  ஜாதிக ஹெல உறுமயின் கண்டிக் கிளை  பேராதளை வைத்திய சாலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
பேராதனை வைத்திய சாலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் சிங்கள பௌத்த பெண்களை கட்டாப்படுத்தி குடும்பக் கட்டு;பாட்டுச் சத்திர சிகிற்சை செய்வதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகளை அவர்கள் மீது திணிப்பதாகவும்  ஆர்பாட்டக் காரர்கள்  குற்றச் சாட்டுக்களை முன்வைத்தே இவ்வார்பாட்டத்தை ஒழுங்கு செய்தமை தெரிய வந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் துஷார ஸ்வர்ணதிலக்க இது பற்றித் தெரிவிக்கையில் சிங்களப் பெண்கள் பலரிடம் இருந்து தமக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்ட காரர்களுடன் கலந்துரையாடிய  பேராதனை வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்திரா குனதிலக்க இக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக 48 மணித்தியாலத்திற்குள் விஷேட விசாரணை ஒன்றை ஆரமபிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில்;  குறித்த வைத்தியர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டால்  அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இவ் விடயம் சம்பந்தமாக  சுகாதார அமைச்சின் செயலாளரின் கவனம் ஈர்க்கப்டுள்ளதாகவும் இது தொடாபாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment