அரச
கரும மொழிகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புதிய இணையத்தின்
அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகள் நிலையத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment