தான்
ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை எனவும், அந்தக்
கட்சி முன்னணியாக மாறி தன்னையும் அதற்கு அழைத்தால் தான் அதனுடன்
சேர்ந்துகொள்வதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி
குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறுவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளபோதும், தேசிய ஐக்கிய முன்னணியுடனேயே தொடர்ந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
'எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. என்றாலும் எனக்கென ஒரு கட்சியுள்ளது. அதனை இந்நேரம் மக்கள் வேண்டுகிறார்கள். அக்கட்சிசார் பணிகள் இலங்கையெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்வேளை நாட்டுக்குத் தேவையான கட்சி ஐக்கிய தேசியக் கட்சியென்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் நாங்கள் கட்சியாக இருந்து அவர்களுடன் கூட்டணி சேர விரும்புகிறோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும்,
அமைப்பாளர்களை இணைக்கும் திட்டம் தற்போது நடைபெற்றுவருவதாகவும், எதிர்காலத்தில் அரசியலில் புதியதொரு பரிணாமத்தை ஏற்படுத்த தனது உதவியையும் வழங்கவுள்ளதாகவும் எனக் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment