Friday, May 17

முஸ்லிம் அரசியல், சமூக தலைமைகள் செயலற்ற நிலையில் முஸ்லிம்கள் விரக்தியில்

jeylani
அநுராதபுரம் வரலாற்று சின்னம் தகர்ந்தது ,  ஜெய்லானியலும் வரலாற்று சின்னக்கள் தகர்க்கப்படுகிறது, தம்புள்ளை மஸ்ஜித் தகர்க்கப் படும்  ஆபத்து எதிர்கொண்டுள்ளது. எல்லாமே  முஸ்லிம்களின் கையைவிட்டு போய்விடுமோ   என்று முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
தம்புள்ளை மஸ்ஜித் , ஜெய்லானி மஸ்ஜித்  ஆகியனவற்றை சூழவுள்ள பிரதேசங்களில் இடம்பெற்றுவருகின்ற கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கை தொடர்பிலும்    அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு மற்றும் நேரடியான இனவாதத்தை தூண்டும் பிரசாரங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சமூக தலைமைகள்  செயலற்று இருப்பது  குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விரக்தி மனநிலை தோற்றம்  பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது .
தற்போது வெளியாகும் தகவல்கள் ஜெய்லானி பிரதேசத்தில்  சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த (ஹிஜ்ரி 300 ) வரலாற்றைப் பறைசாற்றும் கல் ஒன்றும் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கின்றது . அதேபோன்று அநுராதபுரத்தில் முஸ்லிம்களின் வரலாற்றை பறைசாற்றும்  வரலாற்று சின்னம் பொலிசார் கைகட்டி பார்த்துகொண்டிருக்க உடைத்து தகர்க்கப்பட்டது. இன்று வரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை .

இந்த நிலைதான் ஜெய்லானிக்கும் தம்புள்ளை மஸ்ஜிதுக்கும்  தொடருமா என்று முஸ்லிம்கள் விசனம் கொண்டுள்ளனர் .
அன்று அநுராதபுரம் ஸியாரம் தகர்க்கப் பட்டபோது  ஸ்ரீ  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இப்படி தெரிவித்திருந்தார், ‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’  என்று தெரிவித்திருந்தார் .
ஆனால் நடந்தது எதுவும் இல்லை அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாற்று சின்னம் அழிக்கப்பட்டதுதான் அதன் பின்னர் இன்று ஜெய்லானி பள்ளிக்கு அச்சுறுத்தல் .
ஜெய்லானி பள்ளி நிர்வாகத்தின் அனுமதி இன்றி வரலாற்றைப் பறைசாற்றும் கல் ஒன்றும் ஏனைய கட்டிடங்களும்  அகற்றப் படுவதாக குறித்த நிர்வாகம் தெரிவித்துள்ளது .ஜெய்லானி பள்ளிக்குச் சொந்தமான பழமை வாய்ந்த அனைத்துக் கட்டிடங்களும் கடந்த ஒரு வாரகாலமாக அகற்றப்பட்டு வருகின்றன .
ஜெய்லானி பிரதேசம் முஸ்லிம்களின் வரலாற்றை பேசும் பிரதேசமாகும். ஆனால் முஸ்லிம்களின் வரலாற்று பகுதிகளுக்கு அழிவு விளைவிக்கப் படும்போது   முஸ்லிம்களின் வரலாற்றை பாதுகாக்க போராடவேண்டியவர்கள் செயலற்று  இருக்கிறார்கள் .
தம்புள்ளையில்   தம்புளைப் மஸ்ஜித்  தவிர்ந்த, சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. தம்புள்ளை பள்ளி நிர்வாகமும் முக்கியஸ்தர்களும் தமது பள்ளி விவகாரம் குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. என்று தெரிவிக்கின்றனர்.
 தம்புள்ளை,ஜெய்லானி பள்ளி விவகாரங்கள் பற்றி அகில இலங்கை ஜம்இயதுள் உலமா , உரிய தலைமைகளுக்கு நிர்வாகத்தினர் எடுத்துக் கூறும் சந்தர்ப்பங்களில் பொறுமை காட்டுங்கள்எனக் கூறப்படுகிறதே தவிர நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. என சுட்டிக்காட்டப் படுகிறது .
அன்று அநுராதபுரம் ஸியாரம் உடைக்கப்பட்டது , தலமைகள் செயலற்று இருந்தது , இன்று ஜெய்லானி தகர்ந்து கொண்டிருக்கிறது  தலமைகள் தலைகளை  உள்ளிழுத்து   கொண்டுள்ளது .நாளை தம்புள்ளை மஸ்ஜித்தும் தகர்க்கப்படலாம் . -
தகர்க்கப்படட்டும் சூடான அறிக்கைகளை தமிழில் விடுவோம் என்று காத்திருக்கிறதா ?  முஸ்லிம் அரசியல், சமூக தலைமைகள் ??

No comments:

Post a Comment