தனது தந்தை கைது செய்யப்பட்டதை எதிர்த்து
அசாத் சாலியின் மகளான அமீனா அசாத் சாலி மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று
முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
தனது தந்தை முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவரது கைதானது
உரிமை மீறல் எனவும் கூறியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த வியாழனன்று கைது செய்யப்பட அசாத்
சாலி குற்றப்புலனாய்வு பிரிவின் 90 நாள் தடுப்புக்காவலில் தற்போது
உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment