அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் நாளை தீர்மானம்
கிழக்கில் தொடர்ச்சியாக அரசியல் பழிவாங்கல்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்
கான்கிராஸ் முகம்கொடுப்பதாகவும் அதுதொடர்பில் பாராளுமன்ற
கட்டிடத்தொகுதியில் கூடிய மு.கா.பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம்
விஷேட கவனம் செலுத்தியதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்
ஹசன் அலி விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் மீது பரவலாக
அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது
தொடர்பில் ஆராய மு.கா.பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற கட்டிட
தொகுதியில் பாராளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து கூடினர்.
இதன் போதே கிழக்கு மாகாண நிர்வாகம் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள்
இடம்பெற்றன. இதன் போது கிழக்கு மாகாணத்தில் மு.கா. அரசியல்
பழிவாங்கல்களுக்கு உள்ளாவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதனை அடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம்
எடுக்கும் கலந்துரையாடல் நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் பாராளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து
இந்த கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானம் எட்டப்படுமென மு.கா.செயலாளர்
நாயகம் ஹசன் அலி விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment