Tuesday, May 7

முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தததை தமிழ்தரப்பு ஏற்கவேண்டும் : சுமந்திரன்


வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்திலே மிகப் பாரிய குற்றமான இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதையும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியிலே வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் துன்புறுத்தல் செய்தது என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக எங்களுடைய பூர்வீக நிலம் தற்போது சுவீகரிக்கப்படுகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேநேரம் எங்களுடைய தரப்பிலிருந்தும் தவறுகள் இடம்பெற்றுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மண்ணிலிருந்து இனச் சுத்திகரிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது இந்த கசப்பான உண்மை. நாங்களும் இன சுத்திகரிப்பிற்கு குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் எமக்கெதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment