Tuesday, May 7

காணி, காவல்துறை அதிகாரங்களைப் பிடுங்குவதற்காக 19வது திருத்தச்சட்டம்

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, மாகாணங்களின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறிக்கும், 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சிறிலங்கா அரசாங்கத்தினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கிர வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தல், தலைமை நீதியரசரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது, மற்றும் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, காவல்துறை அதிகாரகளை விலக்கிக் கொள்வது ஆகிய விடயங்கள் இந்த 19வது திருத்தச் சட்டத்தில் இடம்பெறவுள்ளன. 

இந்த 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை வரையும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இந்த திருத்த யோசனைகள் சில, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 

அரசியலமைப்புத் திருத்த வரைபு பணிகள் அடுத்து மூன்று வாரங்களுக்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய திருத்தங்களின் படி, அதிபர் ஒருவர் பதவியேற்று நான்கு ஆண்டுகளின் பின்னரே புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம் என்ற காலஎல்லையை மூன்று ஆண்டுகளாகக் குறைக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. 

மாகாணசபைகளிடம் உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கும், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அதேவேளை, மாகாணசபைகளுக்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் சமூக காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment