கேகாலை,
தெய்யோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தட்டுவல்கந்த தோட்டத்தில்
இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வை அடுத்து அத்தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை
தமிழ் மக்களின் தோட்ட குடியிருப்புக்கள் மற்றும் உடைமைகள் பெரும்பான்மை இனத்தவர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக அத்தோட்ட மக்கள்
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனிடம் தெரிவித்ததை அடுத்து
அத்தருணத்திலேயே பொலிஸ் அதிகாரிக ளுடன் தொடர்புகொண்டு குறித்த தோட்டத்தின்
பாதுகாப்பை உறுதி செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விஜயம் செய்து
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சம்பவம்
குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.-விரகேசரி
No comments:
Post a Comment