Sunday, May 5

ஜம்மியத்துல் உலமா, ஆஸாத் சாலி கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆஸாத் சாலி கைது தொடர்பில் இன்று 04-05-2013 கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
இதுதொடர்பில் ஜம்மியத்துல் உலமா சபையின் உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படுமென உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.
இதேவேளை ஜம்மியத்துல் உலமா சபை ஆஸாத் சாலி கைது தொடர்பில் அவருடைய குடும்பத்தினருடன் கலந்துரையாடி இருப்பதாகவும், சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை  மேற்கொண்டதாகவும் அறியவருகிறது.

No comments:

Post a Comment