தமிழ்-
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் அசாத் சாலியை விடுதலை
செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா விடுத்துள்ளது.
அசாத் சாலியின் கைது தொடர்பில் முஸ்லிம்
சமூகம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் விடுத்துள்ள கோரிக்கையில், அசாத் சாலி நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் தயவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா
அமைப்பின் தலைவர் என் .எம் அமீன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே
மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment