அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி கொழும்பு மாநகர
முன்னால் பிரதி மேயர் அசாத் சாலியின் குடும்பத்தினருடன் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அசாத் சாலியின் கைது சம்பந்தமாக அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கவனத்தில் எடுத்துள்ளதாகவும் அவரது விடுதலை
விடயமாக முடியுமான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.
இதேபோல், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்புக் கோட்டை சதம் வீதி ஜுமுஆ
மஸ்ஜிதில் ஜுமுஆத் தொழுகையின்பின் தலைவர் முப்தி றிஸ்வி அவர்கள்
கூடியிருந்த மக்களிடம் அவரது விடுதலைக்காக பிரார்த்தனை செய்யும்படியும்
வேண்டுகோள் விடுத்தார்.
அலவி மௌலானாவுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடல்
கைதாகி நோயுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அசாத் சாலி
விடயமாக மேல் மாகா ஆளுனர் அலவி மௌலானாவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு
கலந்துரையாடினார். அவ்வமயம், அசாத் சாலி எவ்வித பாணமும், ஆகாரமும்
எடுக்காது இருப்பது ஷரீஅத்தின் பார்வையில் பிழையானதும் உடல் நலத்திற்கு
கேடானதும் என்பதை அவருக்கு தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் விடுதலைக்காக ஆளுனர் அவர்கள் தம்மாலான முயற்சிகளை எடுக்கவேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார். இதேநேரம், ஜனாதிபதி அவர்களுக்கு கருனை
மனுவொன்றும் அனுப்ப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
All Ceylon Jamiyyathul Ulama
211, Orabi Pasha Street
Colombo-10
கருணை மனு.............. கருணை மனு என்பது சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்காக நாட்டின் அதிகாரத்தின் (இந் நாட்டு யாப்பின் படி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின்) தயவை வேண்டி மனு சமர்பிபதாகும். அதேவேளை இன்னும் சிலர் மனிதாபிமான நோக்கில் விடுதலை செய்யும் படி வேண்டியும் கடிதமூலம் ஜனாதிபதிக்கு வேண்டுதல் விடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. அசாத் சாலிஹின் சுகயீன நிலைமையை கருத்தில் கொண்டு இப்படி வேண்டுதல் விடுக்கப் பட்டிருந்தாலும் இது போன்ற முயற்சிகள் தனிப்பட்ட முறையில் செல்வாக்கை பயன்படுத்தி செய்யவேண்டிய முயற்சிகளாகும். அனால் பொதுவாக இந் நாட்டு முஸ்லிம்களை பிரதி நிதித்துவபடுத்தி இது போன்ற வேண்டுதல்களையும் மனுக்களையும் விடுப்பதால் "அஸாத்ஸாலிஹ் தெரியாத்தனமாக குற்றமிழைத்து விட்டார் அவரை மன்னித்து விடுதலை செய்யுங்கள் " என்பது போலாகிவிடும். அனால் இன்று நீதியை வேண்டிநிற்கும் இலங்கை முஸ்லிம்கள் எதிர் பார்ப்பது அசாத் சாலிஹின் அநீதமான கைதுக்கு எதிராகவும் , குற்றமிழைத்த , சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பொது பல சேனா விற்கு எதிராகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை நாட்டின் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜம்மியத்துல் உலமாவினால் மேட்கொள்ளபடவேண்டும் என்பதையே. ஜிஹாதுள் அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது "அநியாயக்கார அரசனின் முன் உண்மையை உரக்கச் சொல்வதாகும்" என்பதை என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.இதையே இன்று மக்கள் எதிர்பார்கின்றார்க
ReplyDeleteகருணை மனு.............. கருணை மனு என்பது சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்காக நாட்டின் அதிகாரத்தின் (இந் நாட்டு யாப்பின் படி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின்) தயவை வேண்டி மனு சமர்பிபதாகும். அதேவேளை இன்னும் சிலர் மனிதாபிமான நோக்கில் விடுதலை செய்யும் படி வேண்டியும் கடிதமூலம் ஜனாதிபதிக்கு வேண்டுதல் விடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. அசாத் சாலிஹின் சுகயீன நிலைமையை கருத்தில் கொண்டு இப்படி வேண்டுதல் விடுக்கப் பட்டிருந்தாலும் இது போன்ற முயற்சிகள் தனிப்பட்ட முறையில் செல்வாக்கை பயன்படுத்தி செய்யவேண்டிய முயற்சிகளாகும். அனால் பொதுவாக இந் நாட்டு முஸ்லிம்களை பிரதி நிதித்துவபடுத்தி இது போன்ற வேண்டுதல்களையும் மனுக்களையும் விடுப்பதால் "அஸாத்ஸாலிஹ் தெரியாத்தனமாக குற்றமிழைத்து விட்டார் அவரை மன்னித்து விடுதலை செய்யுங்கள் " என்பது போலாகிவிடும். அனால் இன்று நீதியை வேண்டிநிற்கும் இலங்கை முஸ்லிம்கள் எதிர் பார்ப்பது அசாத் சாலிஹின் அநீதமான கைதுக்கு எதிராகவும் , குற்றமிழைத்த , சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பொது பல சேனா விற்கு எதிராகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை நாட்டின் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜம்மியத்துல் உலமாவினால் மேட்கொள்ளபடவேண்டும் என்பதையே. ஜிஹாதுள் அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது "அநியாயக்கார அரசனின் முன் உண்மையை உரக்கச் சொல்வதாகும்" என்பதை என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.இதையே இன்று மக்கள் எதிர்பார்கின்றார்க
ReplyDelete