Sunday, May 5

வாப்பாவை இதற்கு முன் இப்படியொரு கோலத்தில் பார்க்கவில்லை - மகள் உருக்கம்


கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை அவரது குடும்பத்தினர் இன்று சனிக்கிழமை பார்வையிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆஸாத் சாலியின் மகள் ஆமீனா ஆஸாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,
நானும், உம்மாவும் இன்று எங்களது வாப்பாவை பார்வையிட்டேம். எங்களுக்கு வாப்பாவை பார்வையிட 15 நிமிடங்கள் மாத்திரமே அனுமதி தந்தார்கள். நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணியாவது குடியுங்கள் என்று வாப்பாவிடம் கெஞ்சினோம். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். என்னை அநீதியான முறையில் கைது செய்துள்ளனர். என்னை விடுவிக்கும்வரை தனது இந்த போராட்டம் தொடருமென உறுதிபட தெரிவித்தார்.
என்ற வாப்பாவை இதற்கு முன் இதுபோன்ற ஒரு கோலத்தில் பார்க்கவேயில்லை. எனக்கும், உம்மாவுக்கும் ரெம்ப வேதனையாக  இருந்தது. அவரது தலையில் கட்டு போடப்பட்டுள்ளது. நான் ஏன் வாப்பா  உங்கள் தலையில் கட்டு போட்டுள்ளார்கள் என்று வினவினேன். தனக்கு தலைவலி என்றும் எனவேதான் தலையில் கட்டு போட்டுள்ளேன் என்றும் கூறினார்.
வாப்பாவை விடுவிக்கும் போராட்டம் தொடரும். இதுதொடர்பில் சட்டத்தரணிகள் தஸ்தாவேஜுக்களை திரட்டி வருகின்றனர் எனவும் அமீனா ஆஸாத் சாலி  கூறினார்.

No comments:

Post a Comment