குறிப்பாக கல்முனை, மருதமுனை,
நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்துவூர், ஒலுவில், பாலமுனை,
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில்
ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இருப்பினும் வழமைபோன்று போக்குவரத்து
இடம்பெறுகிறது. இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.அஸாத்
சாலியின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹர்த்தால்
அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம்
வேண்டுகோள்விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கல்முனை பிரதேச பாடசாலைகள்
திறக்கப்பட்டு ஆசிரியர்கள் வருகை தந்திருந்தபோதும், மாணவர்களின் வருகை
மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.அரச அலுவலகங்கள்
திறக்கப்பட்டிருந்தாலும், வங்கிகள் தனியார் நிறுவனங்களும்
மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றது. பயணிகளின் வருகை
குறைவாக இருந்தமையை கல்முனை பிரதேசத்தில் அவதானிக்க முடிகிறது.
இதேவேளை ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு
நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என
இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம்
கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் கடைகளை திறந்து வைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment