இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு
முன்பதாக நேற்று புதன்கிழமை ராவணா பலய அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை
முன்னெடுத்தது. இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த
அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே கத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில்,
அண்மைக் காலமாக தமிழகத்திற்கு
இலங்கையர்களால் செல்ல முடியவில்லை. பிக்குகள் சென்றாலும்
தாக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு பதிலாக
தென்னிந்திய தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு வகையில்
போராட்டங்களை நடத்துவது மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வது என பல வழிகளில்
இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். இந்நிலையில் தமிழக நடிகர்களின்
படங்களை உள்நாட்டிற்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்
போன்ற நடிகர்களின் படங்களை இறக்குமதி செய்யக்கூடாது. கடந்த கால
போராட்டங்களில் சரத்குமார் மற்றும் விஜய் போன்ற நடிகர்களும் இலங்கைக்கு
எதிரான கருத்துக்களையே முன்வைத்தனர். எனவே, இவர்களின் படங்களை இலங்கையில்
திரையிட அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பில் இலங்கை திரைப்படக்
கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் அதற்கு
சாதகமான பதிலை தந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment