எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஹெட்டன் பொலிசாரினால் வெசாக்
வலயமொன்றினை ஏற்படுத்தும் முகமாக நியமிக்க பட்ட குழுவொன்றுக்கு பொருளாளராக
முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெசாக் வலயமொன்றினை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட நிர்வாக குழுவின் முக்கிய
பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலேயே தற்போது எதிர்ப்பு
வெளிக்காட்டப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டவரகளைக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவானது
வெசாக் வலயத்தை ஏற்படுத்த நிதி சேகரிக்கும் போது அந்நிதியானது குறித்த
பொருளாலரின் கணக்கிற்கே செல்லுமெனவும் பெளத்தர்களின் முக்கிய பண்டிகையான
வெசாக் பண்டிகையை கொண்டாட நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவுக்கு முஸ்லிம்
ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஹெட்டன் பிரதேசத்தில் பெளத்தர்கள் இல்லையா
என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அச்செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment