13 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கெப்பத்திகொல்லாவ பகுதியிலுள்ள விஹாரையொன்றின் தேரரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் மதவழிபாட்டிற்காக விஹாரைக்கு சமூகமளித்த சந்தர்ப்பத்தில்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட பிக்கு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment