இலங்கை
முஸ்லிம்களுக்கெதிராக அனைத்து சதிகளையும் நிறைவேற்றியவர்கள் இன்று நாம்
அதற்குப் பொறுப்பல்ல என்பது போல் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தம்மை
நல்லவர்களாக காட்டுவதற்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை போகின்றதென
ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த அறிக்கையில் மேலும்
தெரிவித்ததாவது, இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இனவாத பிரச்சினைகளுக்கு
முஸ்லிம் மக்களே காரணம் என்பது போல் சில முஸ்லிம் அரைகுறை போதகர்களின்
கூற்று கண்டிப்புக்குரியதாகும்.
என்னமாய் இருந்த இலங்கை வானொலி முஸ்லிம்
சேவை இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போலாகி விட்டது. இலங்கை
முஸ்லிம்களுக்கெதிராக அனைத்து சதிகளையும் நிறைவேற்றியவர்கள் இன்று நாம்
அதற்கு பொறுப்பல்ல என்பது போல் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தம்மை
நல்லவர்களாக காட்டுவதற்கு இலங்கை வானொலி முஸ்லிம் சேவை துணை போகிறது. ஒரு
பொய்யை ஆயிரம் தடவை கூறினால் அது உண்மையாகி விடும் எனும் நாஸிகளின் கருத்தை
முஸ்லிம் சேவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது கவலை தருவதாகும்.
இதில் கலந்து கொள்ளும்மௌலவி அல்லாத சமய
விவகார இணைப்பாளர்களும் பதவிகளை கண்டவுடன் தாமும் மௌலவிதான் என வேடம்
போட்டவர்களும் இன்று முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்கும் இன்னல்களுக்கு
முஸ்லிம்கள்தான் காரணம் என்பது போல் பேசுவார்கள்.
முஸ்லிம்கள் அந்நியவர்களுடன் நல்ல
முறையில் பழக வேண்டும், மற்றவர்களை அனுசரித்து வாழ வேண்டும் என்றெல்லாம்
முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்வதன் மூலம் ஏதோ தென்னிலங்கை முஸ்லிம்கள்
பொறுமையற்றவர்கள், அந்நிய சமூகத்துடன் அழகிய முறையில் வாழத் தெரியாதவர்கள்
என்பது போல் சித்தரிக்கின்றனர் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment