கிழக்கு மாகாண சபையில் கூட்டணி எடுக்கும்
தீர்மானங்களைத் தாம் இனி வரும் காலங்களில் ஆதரிக்கப்போவதில்லை என முஸ்லிம்
காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக மு.கா வட்டாரங்களை ஆதாரங்காட்டி சிங்கள
ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கையெதுவும்
மெற்கொள்ளவில்லையென அதிருப்தி தெரிவித்த கட்சி உறுப்பினர்கள் அரசுக்குத்
தமது கட்சி வழங்கும் ஆதரவை மு.கா வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்
கட்சித் தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீமை வலியுறுத்தியபோதும் அதனை அவர்
நிராகரித்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
இந்நிலையிலேயே அவர் அரசாங்கத்திடம்
‘அனுமதி’ பெற்று பொது பல சேனாவை சாடுவதும், இன்று அஸாத் சாலியைக் விடுதலை
செய்ய வேண்டும் என கோரிக்கை விடுவதுமாகும் என அரசியல் அவதானிகள் கருத்து
வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் அஸாத் சாலியின் நடவடிக்கைகள்
குறித்து ஹகீம் கேலியாகப் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில்
பரவலாகப் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment