தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.
கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென்ற யோசனைத் திட்டமொன்றை
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனை தடுக்க
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். இது
தொடர்பில் விசேட யோசனைத் திட்டமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கத்
திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் சட்டத்தை உருவாக்குதவன் மூலம் சமூகங்களுக்கு இடையிலான
ஒற்றுமையை உறுதி செய்ய முடியும் என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ
தெரிவித்துள்ளார். குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை
வெளியிடுவதனை தடுக்கும் யோசனைக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸூம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment