இந்த
வருடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை உருவெடுக்கும் அச்சம்
நிலவுவதாக களனி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்த
தம்மானந்த தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
வருடம்தோறும் கறுப்பு ஜூலையைச்
சந்தித்துவரும் இலங்கையில், தற்போது முஸ்லிம்கள் இலக்கு
வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இனநல்லுறவை ஏற்படுத்தும்
செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளன.
இதனால் இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள்
ஏற்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்கும் என்று கல்கந்த
தம்மாநந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment