Tuesday, April 2

மற்ற சமயங்களில் குறை காண்பவன் சரியான பௌத்தனாக இருக்க முடியாது - பிரதமர்



பிற சமயங்களையும் பிற கலாசாரங்களையும் மதிக்கும் போதுதான் நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
கம்பளையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
நான் ஒரு பௌத்தன். பௌத்த சமயப் பாடசாலைகளில் கல்வி கற்றவன். பௌத்த சமயப் பாடசாலையில் ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளேன். அதற்காக நான் பௌத்த மதம் மட்டுமே சரியென்று  விமர்சிக்கவில்லை. மற்ற சமயங்களிலும் கலாச்சாரங்களிலும் குறை காண்பவன் சரியான பௌத்தனாக இருக்க முடியாது. பௌத்தர்களில் அநேகர் பிற மதக் கலாச்சாரங்களை மதிக்கின்றனர். காரணம் கௌதம புத்தரின் வழிகாட்டல் அதுதான்.
தமிழ் மக்களது சொந்த நிலங்களை அவர்களுக்கு உரிமை யற்றதாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தீய சக்திகளினால் பிரசாரங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. அது தவறானதாகும். தமிழர்களை அனாதரவாக்க இடமளிக்க மாட்டோம். நான் 21 முறை யாழ்பாணம் சென்றுள்ளேன். இதில் ஒரு முறையாவது அவர்கள் எனக்கோ அல்லது நான் அவர்களுக்கோ அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொண்டது கிடையாது.
திடமான சமூகம் ஒன்றை உருவாக்கு வற்கு சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் ஏற்பட வேண்டும். அதில் அந்யோன்ய புரிந்துணர்வு  நன்றி யுணர்வு என்பன இருத்தல் வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பிரதமருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டமை தொடர்பாக பராட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment