Tuesday, April 2

15ஆம் திகதிக்கு பின் 7%த்தால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின் பேரூந்து கட்டணங்கள்  தனியார் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதிகரிக்கப்படும் என,
இம்மாதம் 15ஆம் திகதிக்கு பின் 7 சதவீதத்தால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என, தனியார் போக்குவரத்து அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி இன்னும் அமைச்சால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும் ஆரம்ப கட்டணமான 9 ரூபாவில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரியவருகிறது.

No comments:

Post a Comment