இன்று உலகலாவிய ரீதியில் 1200
பில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அவர்களையும் புண்படுத்தும் என்பதை
எடுத்துரைத்துள்ள முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர்,
இலங்கை நாட்டில் 1971, 1988, 1989 ஆண்டு காலப்பகுதிலும் அதனை தெடர்ந்து
ஏற்பட்ட இரத்த குளிப்பினையும் மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்று
கடும்தொனியில் தெரிவித்தார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று
செவ்வாயக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து
தெரிவிக்கையில்;
இன்று பொதுபல சேனா கூறுவது போன்று
அமைச்சர் ஹக்கீமே மற்றும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களோ இல்லையென்றால்,
ஜனநாயகத்தை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க அல்கைதாவையோ,
அடிப்படைவாதிகளையா அழைக்க வேண்டுகின்றார்கள்.
பௌத்த மதம் என்பது மனித நேயத்தை
விரும்பும் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் நெருக்கமாக உறவை பேணுமாறே
கூறுகின்றது. இன்று தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு காரணம் சந்தேகம். இந்த
சந்தேகம் என்பது கொடிய விஷமாகும். இந்த விஷத்தை களையாதவரை ஒருபோதும்
பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.
இன்று யுத்தமற்ற ஒரு சமாதான சூழலில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது சகலரதும்
பொறுப்பாகும். அதைவிடுத்து குரோதத்தை விதைத்து அதிலிருந்து நல்லதை அறுவடை
செய்ய முடியாது. அந்த அறுவடையானது கலவரத்தையே தோற்றுவிக்கும் என்பதை
எச்சரிக்கை செய்கின்றேன். இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு மிகவும்
பழமை வாய்ந்தது. எமது மக்களுக்கிடையில் காணப்படும் உறவினை சீர்குலைக்க
ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.
இங்கு கருத்துரைத்த அருட்தந்தை சக்திவேல்;
நாம் இன்னும் சில தினங்களில் தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட
இருக்கின்றோம். அப்படியென்றால் நாம் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களும்
வாழ்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறெனில் அவர்களது
உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதானே யதார்த்தம்.
ஆனால், அதற்கு மாறாக இந்த நாடு தனியொரு
சமூகத்திற்கு மட்டும் சார்ந்த்து என்று கூறுவது பொருத்தமற்றதுதானே.
முஸ்லிம்கள் அவர்களது விடயங்களில் ஹலால், ஹராம் பேனுவது அது மதக்
கடைமையாகும். ஹலால் என்றால் நல்லது, ஹராம் என்றால் கூடாது. இன்று சிலர்
அந்த ஹராத்தை செய்கின்றார்கள். ஹராத்தை இல்லாமல் ஆக்கவேண்டும்.
அரசாங்கத்துக்குள் சிலர் இருந்துகொண்டு
சிலர் ஹராத்தை ஊக்குவிக்கின்றார்கள். இவர்கள் யாரென்பது குறித்து
ஜனாதிபதிக்கு நன்னு தெரியும். அவர்களை தமது ஆட்சியில் இருந்து
அப்புறப்படுத்தி விட வேண்டும். இதேபோல் 18ஆவது திருத்தச் சட்டமும்
ஹராமாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கையினை அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும். அதில்
குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் செயலுக்குவர வேண்டும் அப்போதுதான்,
வெளிநாட்டு சக்திகள் எமது நாட்டுக்குள் முகம் புதைக்காது. இல்லாதவிடத்து
தொடர்ந்தும் நாம் சர்வதேசத்துக்கும் ஏனையவர்களுக்கும் பொய்யினையே கூறிக்
கொண்டுவருவோம்.
பொதுபல சேனா இன்று கடும் செயற்பாடுகளை
ஆரம்பித்துள்ளது. இதுவரைக்கும் 2009ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்டதிலிருந்து
அண்மைய பொதுபல சேனாவினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ள மத தளங்கள்
மற்றும் ஏனைய சொத்தழிவுகளின் எண்ணிக்கை 65 ஆகவுள்ளது. இதனை இனியும் செயற்பட
சட்டம் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கூறினார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் மௌலவி பருன்,
அருட்தந்தை பேராசிரியர் கிறிஸ்மன் லியோ, மணி ஸ்ரீனிவாச குருக்கல்,
டி.கே.அசூர் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment