Thursday, April 4

பெப்பிலியான சம்பவம் தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை - அரசாங்கம்

பெப்பிலியான சம்பவத்தில் தொடர்புபட்ட தரப்பினர் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்குமாயின் சம்பந்தப்பட்ட தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கலாம் என அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். 

பெப்பிலியான சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு தரப்பினரும் சமாதானமாகி விட்டதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை யாழ். உதயன் பத்திரிக்கையின் கிளிநொச்சி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு அரசாங்கம் சார்ப்பில் அநுர பிரியதர்சன யாப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். 

உதயன் பத்திரிக்கை மட்டுமல்ல எந்தவொரு நபருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருப்பதாகவும் அவ்வாறு கருத்து வெளியிடும் சுதந்திரம் மீது தாக்குதல் நடத்துவது தவறான செயல் எனவும் அமைச்சர் கூறினார். 

இதேவேளை மாத்தளை மனித புதைகுழி விவகாரம் நீதமன்றத்தால் கையாளப்படுவதால் நீதிமன்றமே அது குறித்து நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

No comments:

Post a Comment