ஹலால் தொடர்பில் இனிமேல் பேசமாட்டோம் என பொது பல சேன இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொது பல சேன தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கொண்டவாறு பொது பல சேன அறிவித்துள்ளது. இங்கு பொது பல சேனவின் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கமே எமது அமைப்பின் முதன்மை நோக்கங்களாகும். அத்துடன் முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட உணவுகளை உண்ண உரிமை உண்டு. அதேபோல் முஸ்லிமல்லாதவர்கள் விரும்பிதை உண்ணலாம்
இதேவேளை, தமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என கோரி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சமர்ப்பிக்கவுள்ள அமைச்சரவை பத்திரத்தை கண்டிக்கின்றோம். குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் அமைச்சரவை பத்திரத்தை கொண்டுவர அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உரிமையில்லை.
அத்துடன் சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை பரப்புவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடைக் களஞ்சியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் எம்பிலிபிடிய, தம்புள்ளை, அநுராதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மோதலில் தமக்கு தொடர்பு இல்லை.
சில இரகசிய குழுக்கள் தம்மீது சேறுபூச விரும்புகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் நிதி வழங்கப்படும் அரசியல் கட்சிகளும் குழுக்களும் பொது பல சேன பற்றி கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றது.
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் எமக்கு முடிவுகட்ட முயல்கின்றது. நாம் இதை நடக்க அனுமதியோம். பொது பல சேன என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றன. இவை தமக்கு உரியவை அல்ல. முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற துண்டுப்பிரசுரங்களை தாங்கள் வெளியிடவில்லை".
No comments:
Post a Comment