குனூத் அந் - நாஸிலாவை நிறுத்த கோரியதற்கு எவ்வித அழுத்தங்களுமில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்புச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கும் குனூத் அந்-நாஸிலாவை விடுவது பற்றிய அறிக்கைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆபத்தான சந்தர்ப்பங்களில் குனூத் அந்நாஸிலாவை ஓதுவது றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறையாகும். அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வந்த அசாதாரண நிலமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தௌபா செய்து அல்லாஹ்வின் பக்கம் மீளுமாறும் சுன்னத்தான நோன்புகளை நோற்று அதிகமதிகம் துஆ செய்து வருமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.
அத்துடன் ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதி வருமாரும் அனைவரையும் வேண்டியிருந்தது. தற்பொழுது நாட்டில் ஓரளவு சுமுகமான நிலை நிலவுவதால் இதனை நிறுத்துவதா அல்லது தொடர்ந்தும் ஓதச் சொல்வதா என்ற விடயம் பல தரப்பாலும் ஜம்இய்யாவிடம் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது.
முஸ்லிம்கள் முன்னோக்கும் தற்காலப் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடுவதற்கென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு கடந்த வார இறுதியில் கண்டி தஸ்கரை அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் கூடியது.
அந்த சமயம் குனூத் அந்நாஸிலா சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் தற்பொழுது அதனை நிறுத்திக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. மேற்படி தீர்மானத்திற்கமையவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குனூத் அந்நாஸிலா சம்பந்தமான அறிவித்தலை கொடுத்ததே தவிர வேறெந்த அழுத்தங்களுக்காவுமல்ல என்பதை பொதுமக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றது.
மேலும், கடந்த திங்கட்கிழமை பாதுகாப்புச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்புக்கும் குனூத் அந்-நாஸிலாவை விடுவது பற்றிய அறிக்கைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.அதேநேரம், குனூத் அந்-நாஸிலாவையே நிறுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளதேயன்றி தர்மம், சுன்னத்தான நோன்புகள் மற்றும் துஆ போன்ற காரியங்களைத் தொடர்ந்தும் வழமை போல் செய்து வரலாம்.
எனவேஇ ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும்பொழுது '(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ரகீப்இ அதீத் எனும் மலக்குகள் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது) (சூரா காஃப் :18) என்ற திருவசனத்தை ஞாபகம் வைத்துச் செயற்படவேண்டு என மெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவுரை பகர்கின்றது" என்றார்.

No comments:
Post a Comment