Thursday, April 4

மஹிந்தவின் அமைச்சரவை கூடியது - முஸ்லிம்கள் குறித்து எவரும் மூச்சு விடவில்லை



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. 
அண்மையில் பெஷன்பக் மீதான தாக்குதல் தொடர்பில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூடி ஆயராயுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை கோரியிருந்தார். தொடர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதுதொடர்பில் சூடான அறிக்கைகளை விட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இன்று வியாழக்கிழமை அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் அமைச்சர்களும் சமூகமளித்துள்ளனர். இருந்தபோதும் முஸ்லிம்களுக்கான தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் எவருமே வாய் திறக்கவேயில்லை என  நம்பகரமான அமைச்சர்கள் வட்டாரங்களிருந்து அறியவருகிறது.

No comments:

Post a Comment