Thursday, April 4

ஜெய்லானி பள்ளிவாசல் பிரதேசத்தில் நான்கு கடைகளும் அகற்றப்பட்டன

ஜெய்லானி பள்ளிவாசலுக்கு அண்மையில் கூரகல தொல்பொருள் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு கடைகளும் நேற்று புதன்கிழமை அகற்றப்பட்டன.

குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென 2006 ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் உத்தரவிட்டும் கடைகளில் சிலவே அகற்றப்பட்டன. நான்கு கடைகள் அகற்றப்படவில்லை.

இதனையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினால் கடை உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டிருந்தது. ஜெய்லானி பள்ளிவாசல் பிரதேசம் தொடர்பில் கடந்த வாரம் முஸ்லிம் கவுன்ஸில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பள்ளிவாசல் பரிபாலன சபை கூரகல தொல்பொருள் பிரதேசத்தைப் பரிபாலிக்கும் கண்டி அஸ்கிரிய பீட பிரதிநிதிகள் என்போருக்கும் பாதுகாப்பு பெயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு பெற்றுக் கொள்வதாக இணக்கம் காணப்பட்டதையடுத்தே பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய குறிப்பிட்ட நான்கு கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment